சோற்றுக்கற்றாழை செடி பயன்கள்:
நமது முன்னோர்கள் வீட்டிற்கு குறைந்தது ஒரு சோற்றுக்கற்றாழையை நட்டு வைத்திருந்தார்கள் காரணம் சோற்றுக்கற்றாழை எப்போதும் சுற்றுப்புறக் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும். குறிப்பாக காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு மற்றும் பென்சீன்(ஞஞுணத்ஞுணஞு) போன்ற நச்சுக்களை உள்ளிழுத்துக்கொண்டு காற்றை சுத்தமாக்கும் என்பதால் தான்.
கற்றாழை, மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாமல் கொசுக்களை விரட்டுகின்றன. சோற்றுக் கற்றாழையின் பயன்களை அறிந்த மக்கள், அவற்றை வீடுகளில் அலங்கார செடிகளுடன் சேர்த்து வளர்க்கின்றனர். குறிப்பாக, நுழைவாயில், ஜன்னல் போன்ற இடங்களில் தொட்டிகளில் வளர்க்கின்றனர். இதன் காரணமாக, கொசுக்கள் வீடுகளுக்குள் வருவது தடுக்கப்படுகிறது.
சோற்றுக்கற்றாழையை செடி வைத்திருப்பதால், வீடும் குளிர்ச்சியாக நிலவுகிறது.
சோற்றுக்கற்றாழை பற்றிய சில ஆய்வுகள்:
ராயல்
லண்டன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வயிற்றுப்புண்னைப் போக்குவதற்காகக்
கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் 38% பேருக்கு முழு குணம் தந்ததாக செய்தி வந்துள்ளது.
சோற்றுக்கற்றாழைச் சாறு தினம் 2 அவுன்ஸ் உள்ளுக்குக் கொடுப்பதால்
இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிந்து உண்டாக்கும் Coronary heart disease ஆகிய
அச்சம் தரும் உயிர் போக்கி இதய நோய்களைத் தணிக்கிறது என்பது ஒரு மிக முக்கியமான ஆய்வு
ஆகும். இதனால் சீரம் கொலஸ்ட்ரால், சீரம் டிரைகிளிசைரைட்ஸ், சீரம் பாஸ்போ லிபிட்ஸ் ஆகியன
ரத்தத்தில் மிகுதியாவது தடுக்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழையில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிஸம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும் உணவுக்குப்பின் ஆன சர்க்கரை
அளவையும் குறைக்க உதவுகிறது. இதயத்துக்கு போதிய பிராண வாயு கிடைக்க வழி செய்கிறது.
பிராண வாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காதபோது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக்
கற்றாழைச்சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
சோற்றுக்கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் Phagocytes மற்றும்
Antibodies என்னும்
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
சோற்றுக் கற்றாழையில் இருக்கும் Polysaccharides என்னும்
மருந்துப் பொருள், பால்வினை நோயான எய்ட்ஸ் எனும் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. நோய்க்கிருமிகளை முற்றிலுமாக அழித்து
ஆரோக்கியம் தருகிறது. 8 நோயாளிகளுக்கு தினமும் 250 mg Polysaccharides 6 மணி நேரத்துக்கு
ஒருமுறை தந்ததில் 90 நாட்களில் அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் குணமானது தெரிய வருகிறது.
மேற்கூறியவை எல்லாம் சமீபகால ஆய்வுகள் என்றாலும், நம் முன்னோர்களும், முனிவர்களும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்திக் கண்ட பலன்கள் நமக்கும் பெருமை தருவதாக அமைகிறது!
சோற்று கற்றாலை மருத்துவ பயன்கள்:
கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை
கற்றாழையில் உள்ளது.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும்.
இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
சோற்றுக்
கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து
சாப்பிடலாம். அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால்,
நன்கு கழுவிவிடவும்.
- · சோற்றுக் கற்றாழையை உலர்த்தி முறையாகப் பொடித்து வைத்துக்கொண்டு உண்டுவந்தால், எப்போதும் இளமையும் உடல் வலிவும் பெற்று விளங்குவதோடு நூறாண்டு காலம் வாழலாம்.
- · கண் பார்வை தெளிவு பெறும்.
- · சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
- · சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லெட் அளவு வில்லைகளாக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் தணிந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.
- · உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும்.
- · அழகான தோற்றம் ஏற்படும்.
- · சோற்றுக்கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து வெயிலிலிட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கப் போகும்முன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டுவர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.
- · சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒரு கப் அளவு எடுத்து இத்தோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய்விட்டு வதக்கிச் சேர்த்து கடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து, வடிந்து, தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித்துளிகளில் சிறுநீர்க்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.
- · சோற்று கற்றாலை பல்வேறு மருத்துவ பயன்கள் உண்டு.
கற்றாழை பயன்பாட்டில் கவனம் தேவை:
‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் பெருந்தகை சொன்னதற்கிணங்க அளவோடு பயன்படுத்துவது பாதுகாப்பானது ஆகும். வயிற்றுப்போக்கோடு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படவும் செய்யலாம். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கவனம் தேவை. முதலில் சிறிய அளவில் சோதனையாகக் கொடுத்துப் பின் சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம். கூடுமான வரையில் கர்ப்பிணிகள் சோற்றுக் கற்றாழையை உள்ளுக்கு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோலவே பால் புகட்டும் தாய்மார்களும்குழந்தைகள் நலம் கருதி உள்ளுக்கு உபயோகப்படுத்துவதைத் தவிர்ப்பது நலமாகும்.
Aloe Vera Products:
ஹேர் ஆயில் : சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
மூலிகை ஹேர் ஆயில் : தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும். இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்
எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.
மூலிகைக் குளியல் எண்ணெய்: சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.
கற்றாழை ஜெல்; நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடிந்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.
Aloevera Homemade Soap
Aloe Vera Shampoo
Aloe Vera Recipes:
சோற்றுக் கற்றாழை ஜூஸ் :
1. சோற்றுக் கற்றாழை இலை கதுப்பு (எஞுடூ) 2 மேஜைக் கரண்டி
2. எலுமிச்சம்பழச்சாறு 1 மேஜைக் கரண்டி
3. தேன் 2 மேஜைக்கரண்டி
4. உப்பு 1 சிட்டிகைசோற்றுக் கற்றாழை
ஜூஸ் செய்யும் முறை:
1. சோற்றுக் கற்றாழை மடலை மண் போக கழுவி, மேல் தோலை மட்டும் சீவி எடுக்கவும்.
2. உள்ளே ஜெல் போல இருப்பதை சிறிய துண்டாக நறுக்கவும்.
3. நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் அரைக்கவும். அரைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும்.
4. ரொம்ப தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் திக்காகவே (சிரப் போல்) கலக்கி கொள்ளவும்.
சோற்றுக் கற்றாழை ஜூஸ் உடன் எலுமிச்சம்பழச்சாறு, தேன் மற்றம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பருகலாம். இந்த சோற்றுக் கற்றாழை ஜூஸ் ஐ வாரம் ஒரு முறை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.இது வயிற்றுக் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் உஷ்ணம், போன்றவற்றிற்கு சிறந்த மூலிகையாகும்.
கற்றாழை அல்வா:
தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை அரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப் போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து, அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனை ஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.
கற்றாழையின் கூட்டு:
சோற்றுக் கற்றாழையை எடுத்து சுத்திகரித்து மேல் தோலை நீக்கிவிட்டு
உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து ஏழு முறை நன்றாக நீர்விட்டு கைகளால் தேய்த்து
கழுவ சுத்தமாகும். அதனுடைய வாடையும் நீங்கிவிடும். பின்னர் அதை புடலங்காய், பூசணிக்காய்,
பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துமிக்க காய்களைப் போல கூட்டு செய்து உணவாகச் சாப்பிட
சுவையும் சுகமும் தரும்.
Drink recipe
Aloe Vera Butter-milk
Honey Aloe Vera Drink
Aloe vera Kuzhambu
Aloe Vera Sweet
Aloe Vera Laddu
Aloe Vera Roti/Phulka/Chapati
Aloe Vera Ginger Lemon Juice
Aloe Vera subzi
Aloe Vera Vegitable Recipe
Aloe Vera Pickle
கற்றாழை
உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக்
பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.