கோவை :
வெறும்
10
ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் இந்த
மோதிரங்கள், 'ஹெவி மெட்டல்' மோதிரங்களால்,
பலரும் விரல்களை இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், பல விதமான வண்ணங்களிலும்,
டிசைன்களிலும் வரும் 'ஹெவி மெட்டல்'
மோதிரங்களை அணிவது, தமிழகத்தில் சமீபத்திய
'பேஷன்' ஆகியுள்ளது.
அழகுக்காக
அணியும் இந்த மோதிரங்கள், எவ்வளவு
அபாயமானவை என்பதை, இளம் தலைமுறையினர்
உணர்வதில்லை.மிகவும் கனமாகவுள்ள இந்த
மோதிரங்களை, 'டைட்' ஆக அணியும்போது,
அந்த இடத்திற்கு மேல் பகுதிக்கு ரத்த
ஓட்டம் பாய்வது தடுக்கப்படுகிறது. அதனால்,
அந்த விரல் கொஞ்சம் கொஞ்சமாக
உயிர்த்தன்மையை இழக்கிறது.சில நேரங்களில், இந்த
மோதிரம் அணிந்துள்ள விரல்களில் அடிபட்டால், விரல் பெரியளவில் வீங்கி
விடுகிறது. தங்கம், வெள்ளி போன்ற
மோதிரங்களாக இருந்தால், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள
'ரிங் கட்டர்' எனப்படும் கத்தரிக்கோலால்,
அந்த மோதிரத்தை டாக்டர்கள் சாதுர்யமாக வெட்டி எடுத்து விடுகின்றனர்.
ஆனால், இந்த மோதிரங்களை, எந்த
'கட்டர்' வைத்தும் வெட்ட முடியாது.
ராஜன் நகர் கஸ்தூரிபாய் பள்ளியில்
ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். நண்பன்
கொடுத்த 'ஹெவி மெட்டல்' மோதிரத்தை
அணிந்து கொண்டு, பள்ளிப்பேருந்தில் திரும்பும்போது,
மோதிரம் அணிந்திருந்த விரல், பஸ்சில் இடுக்கு
ஒன்றில் சிக்கிக்கொண்டது.
அருகிலிருந்த
மாணவர்கள் சிலர், தங்களது பலத்தைப்
பிரயோகித்து, இடது கையை வேகமாக
இழுக்க, சதை, நரம்பு எல்லாம்
மோதிரத்துடன் போய் விட, எலும்புள்ள
விரல் மட்டும் கையோடு வந்துள்ளது.
உடனடியாக, சத்தியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று,
அதே இடது கையிலிருந்து சதை,
நரம்பு எல்லாம் எடுத்து, இந்த
விரலில் வைத்துத் தைக்க முயன்றுள்ளனர். ஆனால்,
விரலில் முற்றிலுமாக ரத்த ஓட்டம் நின்று
போனதால், அந்த சிகிச்சை பலன்
தரவில்லை. முற்றிலும் கருப்பாகி, விரலே அழுகியதுபோலாகி விட்டது.
கோவை ராம்நகரில் உள்ள குளோபல் எலும்பு
மருத்துவமனையில், அந்த விரல் நேற்று
அகற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக,
இதேபோன்ற மோதிரம் அணிந்து, விரல்
வீங்கிய நிலையில் வந்த மாணவியின் விரல்,
இதே மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது.அந்த மாணவிக்கு மயக்க
மருந்து கொடுத்து, 'BURR' என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி,
மோதிரத்தை அறுத்து எடுத்து, விரலைக்
காப்பாற்றியுள்ளனர். இதே மருத்துவமனையில், இந்த
ஆண்டில் மட்டும், இதுவரை 9 பேர், இந்த மோதிரத்தால்
ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். அவர்களில்,
இந்த மாணவன் உட்பட இருவரது
விரல்களைக் காப்பாற்ற முடியவில்லை.
குளோபல்
மருத்துவமனையின் தலைமை எலும்பு அறுவை
சிகிச்சை நிபுணர் கார்த்திக் கூறுகையில்,
''இதற்காக, சிகிச்சைக்கு வந்த எல்லோருமே, 20 வயதுக்குட்பட
இள வயதினர் தான். வெறும்
10
ரூபாய் மோதிரம் என்பதற்காக, இதை
வாங்கி அணிவதால், விரலையே பறிகொடுக்க வேண்டிய
அபாயம் உள்ளது. பெற்றோர் விழிப்புணர்வுடன்
இருந்து, தங்களது குழந்தைகள் இந்த
மோதிரங்களை அணிவதைத் தடுக்க வேண்டும். பள்ளி
நிர்வாகங்களும், இதனை நேரடியாக அறிவித்து,
இது போன்ற மோதிரம் அணிந்து
வருவதைத் தடை செய்தால் நல்லது,''
என்றார்.
I like very much Good. It is message to all kind of people. Especially teenagers,youngster generation
ReplyDelete