Tuesday, April 24, 2018

நம் சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?



உலகையே அச்சுறுத்தும் "-கோலை" பாக்டீரியாவைக் கொல்லும் திறன் செப்பு உலோகத்திற்கு உண்டு என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட இது போன்ற திறன் கிடையாது.

நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள், வெங்கலம், பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

“நீரை தாமிரம் என்கிற செம்பு பாத்திரத்தில் வைத்து பருகி வந்தனர்”

நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்:
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும். என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின்  நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர்.    பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும். என்றும் அவர் கூறியுள்ளார்.

செம்பு சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும்.
எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும்  முக்கியமானது.


நீரைக் குடிக்கும் முறை:
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து  தேவை, குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த  தண்ணீரிலேயே  சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைக்க வேண்டும். இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45
நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின்
வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள
பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.


செம்பு பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு
உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

1.பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும்.
செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே  த்தமானவையாக இருக்கும்.
2.தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்.
3.கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4.அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது.
5.புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்யும்.
6.மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது.
7.வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
8.செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
9.இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது.
10.கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்கம். தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
11.புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது.
12.தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
13. செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை.
14. விந்தணு உற்பத்தி அதிகமாகும்.
15. உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.
   16.-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு
உண்டு.
17. விடிலிகோ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.
18. உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது     இருக்குமானால்    அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
  19. குன்மம் (அல்சர்)  நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
     20. இருமல்,  இரைப்பு நோய் வராது.
     21. செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும்.
     22. உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை    அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது.

தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது சித்த மருத்துவ அடிப்படையாகும். சித்த மருத்துவ பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம், பித்தம், மற்றும் வாதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.

எகிப்தில் தொன்மைக் காலம் முதலே செப்புப் பாத்திரத்தில்
தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை:
ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

செப்பு தன்னை சுற்றி இருக்கும். பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள்  சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும். செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.

இயற்கை பியூரிபையர்:
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.

குழந்தைகளுக்கு:
முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் உப்பு மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.


Reference:

No comments:

Post a Comment

Google Analytics Alternative