Tuesday, October 9, 2018

மூத்த சகோதரியின் தியாகத்தை மறவாதீர்!

மூத்த சகோதரியின் தியாகத்தை மறவாதீர்!
மூத்த சகோதரியின் தியாகத்தை மறவாதீர்!

குடும்பத்தின் மூத்த பெண்ணாக இருப்பின் நிறைய பொறுப்புகள் வந்து சேரும். கடுமையாக உழைத்துத் தன் தங்கை, தம்பிகள் முன்னுக்கு வருவதற்காக தன்னையே தியாகம் செய்து கொண்ட மூத்த சகோதரியின் மன விருப்பம் போல்தான் இளையவர்கள் நடக்க வேண்டும். இல்லையெனில் மூத்த சகோதரியின் மன வேதனைக்கு அவர்கள் ஆளாக நேரிடும். இதனால் தம்பி தங்கைகளின் வாழ்க்கையில் பல சாபங்கள் பிரச்னைகளாக வந்து சேரும். மூத்த சகோதரிக்கு நன்றி செலுத்த மறந்தோரும் மூத்த சகோதரியின் சாபத்தாலும் மன வேதனையாலும் துன்புறுவோரும் புதுக்கோட்டை அருகே தேனிமலை ஆலயத்தில் புனித நீராடி ஸ்ரீதேனுகந்த நாதரை வழிபட்டு தயிர் சாதம் படைத்து தானமளித்திட மூத்த சகோதரியின் சாபமும், மன வேதனையின் கொடூரமும் தீர்ந்து, குடும்பத்தில் சுகம் காண்பர். மூத்த சகோதரி இறந்திருப்பின் அவ்வான்மாவிற்கு சாந்தமும் கிட்டும் ( தகவல் - Sri Agasthia Vijayam, November 1998).

No comments:

Post a Comment

Google Analytics Alternative