Tuesday, October 9, 2018

கடன் பிரச்னைகள் தீரும் - திருச்சேறை ருணவிமோசனர்

கடன் பிரச்னைகள் தீரும் - திருச்சேறை ருணவிமோசனர்
கும்பகோணம் - திருவாரூர் பாதையில், கும்பகோணத் திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் ஞான தீர்த்தம். இது மார்க்கண்டேயரால் அமைக்கப்ப ட்டதாலும், பிறவிப் பிணியைப் போக்கும் அமிர்தமாக விளங்குவதாலும் மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்தத் தீர்த்தத்தின் நீர், ஒரு துளி பட்டாலே சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தின் விருட்சமான மாவிலங்கை மரமும் ஓர் அதிசயம்தான். ஆண்டில் நான்கு மாதங்கள், வெறும் இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், மரம் முழுவதும் வெண்பூக்களாக இருக்கும்; அடுத்த நான்கு மாதங்கள், பூவோ இலை யோ இன்றி வெற்றுமரம் மட்டுமே காணப்படும். ஒற்றைப் பரம்பொருள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தெரிவது போன்று, ஒரே மரம் ஒவ்வொரு விதமாகத் தெரிவதால், இந்த மரமே இறைவனுக்குச் சமமாக மதித்து வணங்கப்படுகிறது.

இந்த மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும்.

 ஆதிகாலத்தில், தௌமிய மகரிஷி இவரை வணங்கி முக்தி அடைந்தாராம்.

இந்தக் கோயிலில் தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீருண விமோசனரையே கடன் நிவர்த் தீஸ்வரர் என்கின்ற னர். ருணம் என்றால் கடன். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி  நீங்குவ தற்காக,சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டா ராம்.  அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம்.

இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர் கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர்.

மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந் துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட் கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட `தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம்', இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

  ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கள்கிழமைகள் தொடர்ந்து பூஜித்துப் பிரார்த்தித்து,

11-வது திங்களன்று அபிஷேக- ஆராதனைகள் செய்தால், கடன் தொல்லைகள் நீங்கும். வீட்டில் செல்வ ஐஸ்வர்யங்கள் செழித்தோங்கும்!

No comments:

Post a Comment

Google Analytics Alternative