Thursday, October 4, 2018

காலிப்ளவர் கம்பு அடை


காலிப்ளவர் கம்பு அடை
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தயிர் - அரை கப்

காலிப்ளவர் - சிறியது 1

சீரகம் - 1 ஸ்பூன்

வெங்காயம் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்த மல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

மிளகு பொடித்தது - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடங் களுக்கு தனியே வைக்கவும்.

காலிபிளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தி ஆற வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

அடுத்து அந்த மாவில் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் இரண்டு கரண்டி மாவை விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும், சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

கம்பு - காலிப்ளவர் அடை ரெடி.

No comments:

Post a Comment

Google Analytics Alternative