கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் (ராமானுஜரால் வழிபடப்பெற்ற திருக்கோயில், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவருட்பாவில் பாடிய திருத்தலம்)
கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள கருங்குழியில் அமைந்துள்ள பழைமையான திருக்கோயில். ராமானுஜரால் வழிபடப்பெற்ற திருக்கோயில், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவருட்பாவில் பாடிய திருத்தலம், விஜயநகர் மாமன்னர் அச்சுதப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில், மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பெற்ற) சிதம்பரம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமான் திருக்கோயில் தாக்கப்பட்ட சமயம் அத்திருக்கோயில் உற்சவமூர்த்தி பாதுகாக்கப்பட்ட திருக்கோயில் எனப் பல விதங்களில் புகழ்பெற்ற திருக்கோயில்.ஒரு காலகட்டத்தில் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் இடிக்கப்பட்ட சமயம் உற்சவமூர்த்தியைப் பாதுகாக்க முயன்ற திருமால் அடியார்கள் கருங்குழி திருக்கோயிலுக்கு கொணர்ந்து பாதுகாத்து வந்தனர். பின்னர் இதனை அறிந்த ராமானுஜர் இப்பெருமாளைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியே திருப்பதி அடைந்து அங்கு பிரதிஷ்டை செய்தார். இத்தல பெருமாளிடம் பக்தி கொண்டவர் வள்ளலார். இதனாலேயே வடலூர் தைப்பூச திருவிழாவில் திருஅறை ஜோதி தரிசனத்திற்குச் செல்லும் போது இத்திருக்கோயில் தீபாராதனை கண்டபின்னரே சித்திவிளாக திருமாளிகைக்குச் செல்கிறார்.
No comments:
Post a Comment