Tuesday, October 9, 2018

வீணை ஆஞ்சநேயர் - மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்

வீணை ஆஞ்சநேயர் - மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்

சிவபெருமான் திருநடனம் புரிந்த மப்பேடு சிங்கீஸ்வரர்  ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் (https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/03/02080636/1148469/singeeswarar-temple-mappedu.vpf)

Location - Singeeswarar Temple
Arakkonam Highway, Mappedu, Tamil Nadu 631402
094449 43644

https://maps.google.com/?cid=2743908555557456963

No comments:

Post a Comment

Google Analytics Alternative